Skip to main content

Posts

Showing posts from August, 2012

கல்யாணத்திற்கு பணம்.

பல வருடங்களுக்கு முன் கரூரைப் பூர்விகமாகக் கொண்டராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில்வசித்து வந்தார் . அவர் மனைவி தர்மாம்பாள் ; ஒரே மகள் காமாட்சி . அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தைவயிற்றுப் பிழைப்பாகாக் கொள்ளவில்லை . உபன்யாசம்பண்ணுவதில் கெட்டிக்காரர் . அதில் , அவர்களாகப் பார்த்துஅளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன்பெற்றுக்கொள்வார் . ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளிடம்மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம் . இருபத்திரண்டு வயதான காமாட்சிக்குத் திடீரெனத் திருமணம்நிச்சயமானது . ஒரு மாதத்தில் திருமணம் . மணமகன்ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர் . தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள் ," பொண்ணுக்குக்கல்யாணம் நிச்சியமாயிடுத்து , கையிலே எவ்வளவுசேர்த்து வெச்சிண்டிருக்கேள் ?" கனபாடிகள் பவ்யமாக ," தாமு , ஒனக்குத் தெரியாதா என்ன ? இதுவரைக்கும்அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே " என்று சொல்ல , தர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது . "அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும் ?